இப்போட்டியில் எளிதாக வெற்றி பெற்று நடால் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.முதல் செட்டை 6-3 என்று எளிதில் வென்ற வாவ்ரிங்கா இரண்டாவது செட்டையும் 6-2 எனவும் கைப்பிற்றினார்.இதனால் சுதாரித்துக்கொண்ட நடால் 3-வது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடினார். இதன் பயனாக 6-3 என 3-வது செட்டை கைப்பற்றினார். ஆனால் அந்த ஆக்ரோஷம் 4-வது செட்டில் நீடிக்கவில்லை. அந்த செட்டை 3-6 என இழந்தார்.
4-வது செட்டின் முடிவில் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற கணக்கில் நடாலை வீழ்த்தி வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார்.28 வயதாகும் வாவ்ரிங்காவிற்கு இதுதான் முதல் கிராண்ட்சிலாம் பட்டமாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறியதே இவருடைய சிறந்ததாக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி