மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012–13–ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில் இருந்து இது தெரிய வந்தது.துபாயில் அவருக்கு 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 95 கோடியிருக்கும்.இதில் ரூ.15 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கனடாவிலும் ரூ.3½ கோடிக்கு வீடு உள்ளது. இது ரூ.1.65 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.6 கோடிக்கு தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் வைத்திருந்தார். வங்கியில் டெபாசிட் செய்தது மற்றும் கையில் வைத்திருந்த மொத்த பணம் ரூ. 7 கோடியாகும்.இது தவிர ஜம்முகாஷ்மீரில் ரூ.12 லட்சத்தில் நிலம் இருக்கிறது. ஆனால் சசிதரூரின் சொத்து மதிப்பு ரூ.6.34 கோடிதான்.
காஷ்மீரை சேர்ந்த சுனந்தா ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள் ஆவார். கனடா குடியுரிமை பெற்றவார். சசிதரூர் 3–வது கணவர் ஆவார்.சுனந்தாவுக்கு அடுத்தப்படியாக 2–வது இடத்தில் இருப்பவர் பிரபுல்பட்டேல் மனைவி ஆவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரியான அவரது மனைவி விர்ஷா பட்டேலின் சொத்து மதிப்பு ரூ. 97 கோடியாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி