புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார்.
மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து சேர்ந்து வாழப்போவதாக நேற்று அறிவித்தனர்.இந்நிலையில் சுனந்தா ஓட்டல் அறையில் இறந்து கிடந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவரது உடலில் காயங்கள் ஏதும் காணப்படவில்லை என சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையர் தீபிகா மிஸ்ரா தெரிவித்தார்.
சசிதரூருக்கு சுனந்தா மூன்றாவது மனைவி ஆவார். அதே போல் சுனந்தாவுக்கும் தரூர் மூன்றாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.சுனந்தா மரணமடைந்தவுடன் மெஹர் தனது டுவிட்டரில், ஏன் இந்த முடிவு, கடவுளே எதற்கு இப்படி செய்தார் என்று டுவிட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி