செய்திகள் மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…

மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி…

மகரவிளக்கு பூஜை வருமானம் 182 கோடி… post thumbnail image
சபரிமலை:-பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிச்சென்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் கடந்த 14-ந்தேதி வரை அப்பம்-அரவணை, உண்டியல் மூலம் மொத்த வருமானம் ரூ.181 கோடியே 78 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தேவசம் தலைவர் எம்.பி.கோவிந்தன் நாயர் கூறியதாவது:-இந்த ஆண்டு முடிந்த மண்டல பூஜை திருவிழா காலத்தில் வருமானம் ரூ.131 கோடியே 74 லட்சம் ஆகும். தற்போது நடந்து வரும் மகர விளக்கு விழாக்காலத்தில் இதுவரை ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் வந்துள்ளது. கடந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு சீசனில் மொத்தம் ரூ.155 கோடியே 67 லட்சம் வருமானம் வந்தது.

இந்த ஆண்டு கடந்த வருட வருமானத்தை விட ரூ.26 கோடியே 11 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த சீசனில் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகம் ஆகும்.இனி சபரிமலை சீசன் காலத்தில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அன்னதானம் வழங்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ரூ.6½ கோடி செலவில் மாளிகைப்புரம் கோவில் நவீனப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அதிக பொருட் செலவில் செய்யப்படும்படி பூஜை கடந்த 2 நாட்களாக சபரிமலையில் நடந்தது. புனிதம் நிறைந்த 18 படிகளிலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு, குத்து விளக்கு ஏற்றி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி படி பூஜை நடத்தினார். இந்த படிபூஜையை தரிசிக்க திரளான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். இன்றும் படி பூஜை நடைபெறுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி