ஸ்பினாச் கீரையில் அதிக இரும்பு மற்றும் கால்சியம் உள்ளது. இக்கீரை உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கிறது.
தேவையான பொருட்கள் :
கொண்டைகடலை – 1 கப் , சிகப்பு அரிசி – கால் கப், பாலக் கீரை – 1 கப், காய்ந்த மிளகாய் – 3, உப்பு- தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு – தலா 1 ஸ்பூன் ,பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
கொண்டைக்கடலை, அரிசியை தனித்தனியாக குறைந்தது 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.கீரையை கழுவிக் கொள்ளவும். கொண்டைக்கடலை, கீரை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும். அரிசியை கழுவி கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து கலந்து 30 நிமிடம் வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும். இந்த தோசையில் எந்த வகையான கீரையினை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். இப்போது சுவையான ஸ்பினாச் கீரை தோசை ரெடி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி