செய்திகள் “மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…

“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்…

“மனஅழுத்தம்” நீக்கும் ஓய்வு ஆசனம்… post thumbnail image

மனஅழுத்தம், துன்பம், வாழ்கையில் ஏமாற்றம், சோகம் போன்ற வாழ்கையில் வெறுப்பு உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்தால் வாழ்கையில் மாற்றம் ஏற்படும்.

முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். பாதங்களை 1 அடி இடைவெளி விட்டு பிரித்து வைக்கவும். தலை எந்தப்பக்கமும் சாயாமல் நேராக வைத்து சாதாரணமாக சுவாசத்தை கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.

இந்த நிலையில் படுத்தபடி தலை உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு பகுதியாக மனதிற்குள் நினைத்து கொள்ள வேண்டும். பின்னர் அமைதியாக 10 நிமிடம் இருந்த பிறகு எழ வேண்டும். அனைத்து ஆசனங்களும் செய்த பின்னர் கடைசியாக தான் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இதற்கு ஓய்வு ஆசனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

பலன்கள்:

மனதின் இறுக்கமும்,அழுத்தமும் சமன்செய்யப்படுகின்றன.

எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன.

அதிக இரத்த அழுத்தம், மனதில் ஏற்படும் மனநோய்ப் பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கிறது.

பொதுவாக உடல்நலனை அதிகரிக்கச் செய்கிறது.

வாழ்கையில் மகிழ்ச்சி ஏற்ப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி