சுத்தம் செய்ய சில எளிமையான வகைகள்
தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சூடாக காய்ச்சி, அதை பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும். தேங்காய் எண்ணெயை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்குமாறு காய்ச்சத் தொடங்கவும். வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயில் 3-4 துளிகளை காதில் விடவும்.
இந்த வெதுவெதுப்பான எண்ணெய் கரைப்பானாக செயல்பட்டு காதில் உள்ள மெழுகை கரைத்து, எளிதில் வெளியேறச் செய்யும். இவ்வாறு எண்ணெயை காதுக்குள் விடும் போது, தலையை எதிர்ப்புறமாக திருப்பி வைத்தால், எண்ணெய் காதுக்குள் ஆழமாக உள்ளே செல்லும். இரவு முழுவதும் எண்ணெயை காதுக்குள் வைத்திருக்கும் பொருட்டாக பஞ்சை கொண்டு காதை அடைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தண்ணீரை விட்டு காதை சுத்தம் செய்யுங்கள் மற்றும் அதிகபட்சமாக இருக்கும் எண்ணெயையும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
மென்மையான பட்ஸ்களைக் கொண்டு காதுகளை தொடர்ந்து சுத்தம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முயற்சியின் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் – மென்மையான பட்ஸ்களை தேர்ந்தெடுப்பது தான். காதையோ அல்லது அதன் உட்பகுதிகளையோ சேதப்படுத்தக் கூடிய பட்ஸ்கள் அல்லது கருவிகளை பயன்படுத்த வேண்டாம். நல்ல தரமான மற்றும் மென்மையான பட்ஸ்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.
இந்த வழிமுறைகளை எல்லாம் பயன்படுத்திய பின்னரும் உங்கள் காதுகளில் உள்ள அடைப்புகள் நீங்காவிடில், இது நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரமாகும். காது வலி மற்றும் மெழுகு உருவாகி கிடத்தல் ஆகியவை காது தொடர்பான நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். காதுகளில் தொடர்ந்து மற்றும் அடிக்கடி வலி ஏற்பட்டால் அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்.
மேலும், மருத்துவர்கள் அவர்களிடமுள்ள கருவிகளைக் கொண்டு உங்கள் காதுகளை சுத்தம் செய்து விடுவார்கள். காதுகளில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அதற்கு தொடர்ந்த கவனிப்பும், பராமரிப்பும் அவசியம். உடலின் மற்ற பாகங்களைப் போலவே காதுகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி