அர்கன்சாஸ் மாநிலத்தின் புலஸ்கி கவுண்டியைச் சேர்ந்த மேத்யூ கேம்ப்பெல், வடக்கு ஓரிகான் மாநிலத்தைச் சேர்ந்த மைக்கேல் ஹர்லி ஆகிய இருவரும் இந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள். பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை வேவு பார்ப்பது அவற்றின் ஒளிபரப்பிற்காக உதவுவதற்கு அல்ல என்றும் இதற்குமாறாக அந்தத் தகவல்களைத் திரட்டி வெளிநபர்களான விளம்பரதாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் தகவல் திரட்டுவோருக்கு விற்றுவிடுகின்றது.
எனவே இது எலெக்ட்ரானிக் தகவல்தொடர்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு மாறானது என்று இந்த வழக்கு குறிப்பிடுகின்றது. தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் வேவு பார்க்கப்படுகின்றன என்பதை அறிந்தால் பயனர்கள் அவற்றை வெளியிடமாட்டார்கள் என்றும் பயனர்களுக்கு பேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் மாற்றப்படலாம்.ஆனால் வெளிநபர்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டலில் இவை தொடரப்படும் என்றும் இந்த மனு தெரிவிக்கின்றது. தங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை. இவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் தங்கள் பயனர்களின் பாதுகாப்பிற்காக செய்திகளை வேவு பார்ப்பதில் தவறில்லை. அவ்வாறு செய்யாவிடில் பயனர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று கம்ப்யூட்டர் நிபுணர் கிரஹாம் கூலி கருத்து கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி