கேப்டவுன்:-தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் 32 வயது வாலிபர் கத்தியுடன் சுற்றித் திரிந்தார். ரோட்டில் செல்லும் பொது மக்களிடம் கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்து வந்தான்.
இந்த நிலையில் பட்டப்பகலில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று கற்பழித்தான். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். அவனை கயிறு கட்டி இழுத்து வந்து மக்கள் கூடும் இடத்தில் நிறுத்தினர். அவனை தடியாலும், கல்லாலும் சரமாரியாக அடித்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அவன் அதே இடத்தில் இறந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி