சிங்கப்பூரிலிருந்து அவுஸ்திரேலியாவின் “பிரிஸ்பேன்” நகருக்கு வந்த விமானத்தில் பயணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவரை அவுஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த “மதியாஸ் ஜார்க்”(வயது 54) என தெரியவந்தது.இவர், விமானத்தில் ஏறியது முதல் தொடர்ந்து புகைத்து கொண்டிருந்ததாகவும், புகைப்பதை நிறுத்த சொன்ன விமான ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால்,இவரை கட்டிப் போட்டுள்ளனர்.
இதை, விசாரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம் பாஸ்போர்டை பறிமுதல் செய்து ஜாமின் வழங்கியுள்ளது.இந்த வழக்கின் மீதான விசாரணை 10ம் திகதி நடைபெற உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி