தொடர்ந்து தீ பரவியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் செய்வதறியாது கூச்சலிட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 23 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் சிக்கிய சில பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீப்பிடித்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டதால் எஞ்சிய பெட்டிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அனந்தப்பூர் மார்கத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது . ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் முகாமிட்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி