செய்திகள்,முதன்மை செய்திகள் முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால் …

முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால் …

முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால் … post thumbnail image
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் கட்சி ஆரம்பித்த 6 மாத காலத்தில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

டெல்லியிலுள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ராம் லீலா மைதானத்திற்கு எந்த வித ஆரவாரமும்மில்லாமல் மெட்ரோ ரெயிலில் சாதாரண நபர் போல் பதவியேற்க கெஜ்ரிவால் சென்றது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பின்னர் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் நஜிப் ஜங் முதலில் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்த பின் பேசிய கெஜ்ரிவால், இது எனது பதவியேற்பு விழா, இது மக்களின் பதவியேற்பு விழா என்றும், நேர்மையாக உள்ள எவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி