செய்திகள்,முதன்மை செய்திகள் ஆசிரியரின் பாலியல் தொல்லை …

ஆசிரியரின் பாலியல் தொல்லை …

ஆசிரியரின் பாலியல் தொல்லை … post thumbnail image
மோகனா (வயது 30) என்ற பெண் கேப்டன் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கேப்டன் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராக உள்ள தினேஷ் குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் அடைப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னை மதுரவாயல் காவல்துறையினர் தினேஷ்குமாரை சனிக்கிழமை நள்ளிரவு சென்னையில் உள்ள அவரது வீட்டில். கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அவர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபபட்டார். பின்னர் அவரை ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி