மைனா, களவாணி படங்களின் நாயகிகள் அமலாபால், ஓவியா இருவரும் கேரள வரவுகள். அரைடஜனுக்கு மேல் படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள்.முன்னணி ஹரோக்கள் இவர்களை ஜோடியாக்க விரும்புகின்றனர். எனவே இருவரும் நயன்தாரா, அசின் இடத்தை பிடிப்பார்கள் என கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.அமலாபால் “சிந்து சமவெளி” படத்தில் மாமனாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள மருமகள் கேரக்டரில் அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டார். “மைனா” படம் மூலம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது விக்ரம் ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார். இதை மதராச பட்டணம் படத்தை எடுத்த விஜய் இயக்குகிறார். லிங்குசாமி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆர்யா, மாதவன் நடித்து உள்ளனர்.இதுபற்றி அமலாபால் கூறும்போது, விக்ரம், லிங்குசாமி படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இரு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க என்னிடம் பேசி வருகின்றனர். அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்கும் என்றார்.
முதல் படமான “களவாணி” ஹிட்டால் திரையுலக கவனத்தை ஈர்த்தார் ஓவியா. அடுத்து கமலுடன் “மன்மதன் அம்பு” படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிது நேரம் இப்படத்தில் வருகிறார். பெரிய ஹீரோக்களும், இயக்குனர்களும் கால்ஷீட்டுக்காக ஓவியாவின் பின்னால் ஓடுகிறார்கள்.நயன்தாரா, அசினுக்கு இருந்த வரவேற்பு இவ்விரு நடிகைகளுக்கும் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் விட்ட இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இரு நடிகைகளின் திடீர் வளர்ச்சி திரையுலகத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி