திரையுலகம் டிசம்பர் 17 விஜய்யின் காவலன்

டிசம்பர் 17 விஜய்யின் காவலன்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

டிசம்பர் 24 ஆம் தேதி என்றார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே திரைக்கு வருகிறது காவலன். காவலனில் பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் நடித்திருப்பதால் படத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் குப்பையான படங்கள் எடுக்கும் ஷக்தி சிதம்பரம் படத்தின் ஒட்டுமொத்த உ‌ரிமையை வாங்கினார்.கஷ்டத்தில் இருக்கேன் என்று சில மாதங்கள் மு‌ன்பு கண்ணீர்விட்ட இவர் எப்படி இத்தனை கோடி கொடுத்து படத்தை வாங்கினார் என்பது தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று.

மேலும் இவர் குரு சிஷ்யன் என்ற தனது படத்தில் தேவையே இல்லாமல் ஒரு புலியை கேவலப்படுத்தி சிலரை குளிர்வித்தார் என்பதையும் நினைவில் கொள்க.டிச.24 திரைக்கு வருவதாக இருந்த காவலன் அதற்கு முன்பாக 17 ஆம் தேதியே திரைக்கு வருகிறது. படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஷக்தி சிதம்பரமே இதனை தெ‌ரிவித்தார்

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி