திருமணம் செய்யாமல், செக்ஸ் மற்றும் உடல் ரீதியாக மட்டும் குடும்ப நடத்தும் பெண், மனைவி ஆக முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் பேச்சியம்மாள் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். பேச்சியம்மாள், வேலுச்சாமியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். இதுகுறித்து குடும்பநல கோர்ட்டில் நடந்த வழக்கில் பேச்சியம்மாளுக்கு விவாகரத்து மற்றும் மாதம் ரூ.500 வழங்க உத்தரவிட்டது. இதனை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேலுச்சாமி மேல்முறையீடு செய்தார். அதில் தமக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், பேச்சியம்மாளுடன் சில காலம் மட்டுமே வாழ்ந்து வந்ததாகவும், திருமணம் செய்யவில்லை என்றார். ஆகவே அவருக்கு நான் விவாகரத்து தர அவசியமில்லை என்றும் வாதிட்டார். இருவரின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் பேச்சியம்மாளின் விவாகரத்து அளிக்க உத்தரவிட்ட கீழ்கோர்ட் மற்றும் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்தது. மேலும் ஒரு பெண் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால், அவர் மனைவிக்கான உரிமை பெற முடியாது என்றும், மனைவிக்கான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால், அவர் அத்தகுதியை பெற முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி