செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…

அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…

அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!… post thumbnail image
இபோ:-அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன.

இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இதனால் பெனால்டி சூட்டில் இந்தியா 4-1 என வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றனர். நேற்று நடைபெற்ற போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை 4-2 என வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி