செய்திகள் இரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது!…

இரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது!…

இரட்டை கோபுர தகர்ப்பில் பலியானவரின் அடையாளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு தெரிந்தது!… post thumbnail image
நியூயார்க்:-கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல்-கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் பயங்கர தாக்குதலை நடத்தினர். விமானங்களை கடத்திச் சென்று, நியூயார்க் இரட்டை கோபுரம் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது மோதினர். நியூயார்க் தாக்குதல்களில் 2 ஆயிரத்து 753 பேர் பலியானார்கள் அல்லது காணாமல் போனார்கள்.

இவர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து, ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் மாத்யூ டேவிட் யார்னல். அண்டை மாகாணமான நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர். பலியானபோது அவருக்கு வயது 26. இரட்டை கோபுர இடிபாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித உடல் பாகங்களில் புதிதாக நடத்தப்பட்ட மரபணு பரிசோதனை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி