செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!… post thumbnail image
புது டெல்லி:-டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற முறையில் முந்தைய ஆட்சியில் நடந்ததால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தியது. ஏல முறை பின்பற்றப்பட்டிருந்தால் இழப்பீடு ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து எதிர்காலத்தில் ஏல முறையினை பின்பற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தொலைத் தொடர்பு சேவையில் ஏல முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், மொபைல் போன்கள் சேவைக்கான 2-ஜி, மற்றும் 3-ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த 4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் 2015-16-ம் ஆண்டிற்கான உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் பங்கேற்றன.

19 நாட்களாக நடந்த ஏலம் நிறைவு பெற்றது. மொத்தம் 115 சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்த ஏலத்தின் முடிவில் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 874 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்த பிறகே, ஏலம் எடுத்த நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவற்றுக்கான அலைக்கற்றைகள் விவரம் வெளியிடப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி