அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!… post thumbnail image
புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய மந்திரிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார் கெஜ்ரிவால். இதனால் அவருக்கு போதிய ஓய்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கெஜ்ரிவாலின் உடலை பரிசோதித்த அவரது குடும்ப மருத்துவர் முழு ஓய்வெடுக்குமாறு பரிந்துரை செய்தார். அவருக்கு 101 டிகிரி காய்ச்சல் இருப்பதாகவும், இருமலால் அவர் அவதிப்படுவதாகவும் தெரிகிறது. 14ம் தேதி நடைபெறும் பேரணியிலும் பங்கேற்கவேண்டாம் என்று அவருக்கு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி