செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…

ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!…

ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடும் ஜப்பான் மாணவிகள்!… post thumbnail image
டோக்கியோ:-சமீபத்தில் ஜப்பானில் உள்ள டிஜிட்டல் ஆர்ட்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனம் இளைஞர்களின் செல்போன் பயன்பாடு குறித்து சர்வே மேற்கொண்டது. அதில் ஐப்பானில் படிக்கும் 96 சதவீத உயர் நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் செல்போன் வைத்திருப்பது தெரிய வந்தது.

அதே நேரத்தில் ஜூனியர் உயர்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளில் 60 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இவற்றில் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சராசரியாக ஒரு நாளில் 7 மணி நேரத்தை செல்போனில் செலவிடுகின்றனர். 10 சதவீத மாணவிகள் ஒரு நாளில் 15 மணி நேரத்தை செல்போனில் கழிக்கின்றனர். அதே வயது மாணவர்கள் 4 மணி நேரத்தை மட்டுமே செல்போனில் செலவிடுகின்றனர். செல்போன்களில் தகவல்கள் பரிமாற்றம், கேம்ஸ், சினிமா படங்கள் பார்த்தல், போன்றவற்றுக்காக பயன்படுத்துகின்றனர் என்றும் சர்வேயில் தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி