செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…

திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…

திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!… post thumbnail image
நகரி:-திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு ஆந்திர அரசின் நிபந்தனையின்படி வரவு மற்றும் செலவு கணக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை தேவஸ்தானம் உள் தணிக்கை செய்து வருகிறது.

மேலும் வருடத்துக்கு ஒருமுறை ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருகின்றனர். தேவஸ்தான கணக்கு வழக்குகளை செயல் அதிகாரி மற்றும் 2 செயல் இணை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு சோதனை செய்யாததால் 180 கோடி ரூபாய் தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கான ஆவணங்களும் மாயமாகி இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தேவஸ்தான கணக்கு வழக்கில் மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆந்திர அதிகாரிகள் மத்திய தணிக்கை துறைக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் ரூ.180 கோடி மாயமான விஷயத்தை திருப்பதி தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அந்த பணம் எப்படி மாயமானது என்பதை கண்டுபிடிக்க அவர் தணிக்கையில் அனுபவம் வாய்ந்த நரசிம்மன், சரத்குமார் ஆகியோரை நியமித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி