அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…

தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…

தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கவர்னரான நிக்கி ஹாலே மீண்டும் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஷீஹீனை 178930 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றி பெற்ற நிக்கி ஹாலேவுக்கு ஆதரவாக 685486 வாக்குகளும், ஷீஹீனுக்கு ஆதரவாக 506556 வாக்குகளும் விழுந்துள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் மாகாண கவர்னராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி