செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…

பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!…

பிரபல காமெடி நடிகர் மகாதேவன் காலமானார்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவின் இரட்டையர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சகாதேவன், மகாதேவன், மிகவும் அதிக எடை கொண்ட இந்த இரட்டையர்கள் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சினிமா தவிர்த்து ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர். அதிமுக ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சகாதேவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த நிலையில்,நேற்று அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனும் காலமானார்.

சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட வந்த மகாதேவன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சர்க்கரை நோய் அதிகமாக அவரது வலது காலை எடுக்கும் சூழல் வந்தது. காலை அகற்றியும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, இதனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாதேவன், சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

மகாதேவனுக்கு, சாந்தி என்ற மனைவி இருக்கிறார். மறைந்த மகாதேவனின் உடல், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, அவரது இறுதிசடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி