செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!…

40 கி.மீ உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து கூகுள் துணை தலைவர் சாதனை!… post thumbnail image
வாஷிங்டன்:-கூகுள் செய்தி நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் ஆலன் எஸ்டாஸ் (57). சமீபத்தில் இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் விண்ணில் இருந்து பாராசூட் மூலம் தரையில் குதித்து சாதனை புரிந்தார். பாரகான் விண்வெளி வளர்ச்சி கார்பரேசன் இதற்கான போட்டி நடத்தியது. அதில் பங்கேற்க அவர் ஹீலியம் பலூனில் பூமிக்கு மேலே 40 கி.மீட்டர் உயரத்துக்கு பறந்து சென்றார்.

அங்கிருந்து பாராசூட் மூலம் மணிக்கு 1300 கி.மீட்டர் வேகத்தில் குதித்து சாதனை படைத்தார். இவர் 1 லட்சத்து 35 ஆயிரத்து 890 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவை சேர்ந்த பெலிஸ் யாம் கார்னர் 1 லட்சத்து 28 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தார். அதுவே உலக சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது இவர் முறியடித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி