செய்திகள்,திரையுலகம் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!… post thumbnail image
பாரீஸ்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பட்டை தற்போது காதலித்து வந்தார். மூன்று தத்து குழந்தைகள் உட்பட இவருக்கு ஆறு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஏஞ்ஜலினா ஜூலி தனது காதலர் பிராட் பட்டை பிரான்சில் வைத்து திருமண செய்து கொண்டதாக அமெரிக்க இதழ் ஒன்று அவர்களது திருமண ஆல்ப புகைபடங்களை வெளியிட்டு உள்ளது.

புகைபடங்களில் ஏஞ்லினா ஜூலி திருமண கவுன் அணிந்து உள்ளார் அந்த ஆல்பங்களில் அவரது இவரது 6 குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இந்த தகவலை அவர்களது செய்தி தொடர்பாளரும் உறுதிபடுத்தி உள்ளார். இது மிகவும் குடும்ப விவகாரம் தொடர்பானது என அவர்களது செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.பிட் மற்றும் ஜூலி அமெரிக்காவை சேர்ந்த் கலிபோர்னிய நீதிபதியிடம் திருமன உரிமம் பெற்று கொண்டனர்.அவர் பிரான்ஸ் சென்று திருமணத்தை நடத்தி வைத்து உள்ளார். இது ஒரு ஒரு எளிய நிகழ்ச்சியாக நடைபெற்று உள்ளது.ஜூலியின் மூத்த மகன்கள் மேட்டகஸ் மற்றும் பேக்ஸ் உடன் நடந்து வந்தார்.அவரது 2 மகள்கள் ஜஹாரா மற்றும் விவியன்னெ மலர் தூவினார்கள். மற்ற இரண்டு குழந்தைகள் ஷிலோ மற்றும் நாக்ஸ் திருமண மோதிரத்தை எடுத்து கொடுத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி