செய்திகள்,திரையுலகம் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜான் ஆபிரகாம்!…

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜான் ஆபிரகாம்!…

ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜான் ஆபிரகாம்!… post thumbnail image
மும்பை:-நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது தெரிந்த ஒன்றுதான். அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என மாறி மாறி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் தற்போதைக்கு அவர் நடிக்கும் இந்திப் படம் ஒன்று மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘கான்டே, ஷுட் அவுட் லோகன்ட்வாலா, ஷுட் அவுட் வடாலா’ ஆகிய படங்களை இயக்கிய சஞ்சய் குப்தா அடுத்து இயக்கப் போகும் ‘ஜாஸ்பா’ என்ற படத்தில்தான் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கப் போகிறார்.

ஐந்து ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் ஆரம்பமாக உள்ளது.
ஜான் ஆபிரகாம் பிரபல ஆண் மாடலாக இருந்து திரையுலகிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடிக்கப் போகும் முதல் படம் இது. இதற்கு முன் இருவரும ‘ஹேப்பி பர்த்டே’ என்ற படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் அதன் பின் ஆரம்பமாகவேயில்லை.

ஜான் ஆபிராகம் ‘ஜாஸ்பா’ படத்தில் அபு சலீம் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. படத்தில் அவர் நாயகன் இல்லையென்றாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பாக ஜான் ஆபிராகாமை வைத்து ‘மும்பை சாகா’ என்ற வேறொரு படத்தை இயக்கிய முடிக்க சஞ்சய் குப்தா திட்டமிட்டுள்ளாராம்.’ஜாஸ்பா’ படத்தில் அழகனையும், அழகியையும் ஜோடியாகப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள் பாலிவுட் ரசிகர்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி