செய்திகள்,திரையுலகம் ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…

ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!…

ரம்ஜானில் மோதும் ஜெய், விஜய் ஆண்டனி!… post thumbnail image
சென்னை:-இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரம்ஜானை குறிவைத்து வெளிவருகிறது. இரண்டும் முஸ்லிம்கள் தொடர்புடையது. ஒன்று விஜய் ஆண்டனி நடித்த சலீம், மற்றொன்று ஜெய், நஸ்ரியா நசீம் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ்.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இந்து பையனும், இந்து பெண்ணும் ஒருவரை ஒருவர் முஸ்லிம் என்று தவறாக புரிந்து கொண்டு ஒருவருக்காக மற்றவர் முஸ்லிமாக மாறி காதலிப்பது மாதிரியான கதை. சலீம் படத்தில் விஜய் ஆண்டனி முஸ்லிம் டாக்டராக நடிக்கிறார்.இரண்டு படங்களுமே முஸ்லிம் ஆடியன்சை குறிவைப்பதால் ரம்ஜானை தேர்ந்தெடுத்துள்ளன.

ரம்ஜான் அன்று திருமணம் எனும் நிக்காஹ் படம் ரிலீசாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. சலீம், ரம்ஜான் விருந்தாக வர இருப்பதாக சலீம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகை வருகிற 29ம் தேதி அல்லது 30ம் தேதி வருகிறது. இந்த தேதிகளிலோ அல்லது அதையொட்டிய வெள்ளிக்கிழமையோ படம் ரிலீசாகலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி