செய்திகள்,திரையுலகம் நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…

நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…

நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!… post thumbnail image
சென்னை:-நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நகரத்து பெண்மணியாக நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் சரவணன் கூறும்போது, படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். நகரத்து கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தில் ரசிகர்கள் அவரை ஸ்டைலிஷ் ஆன பெண்ணாக பார்ப்பார்கள்.காதல் மற்றும் அதிரடி காட்சிகள் நிறைந்ததாக படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.ஜெய் உடன் அஞ்சலி நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து சரவணன் கூறுகையில், எனது முதல் படத்தை போன்று இல்லாமல் இந்த படம் இருக்க வேண்டும் என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன். எனவே, இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை அஞ்சலியை அணுக கூடவில்லை. நடிகை ஆண்ட்ரியாவை கருத்தில் கொண்டே இந்த படத்தின் கதையை நான் எழுதினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி