அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…

ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்…

ஆந்திராவை பிரிக்க வேண்டாம் என மந்திரி காலில் விழுந்த எம்.எல்.ஏ.க்கள்… post thumbnail image
புதுடெல்லி:-தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான வரைவு மசோதாவை இறுதி செய்வதற்காக டெல்லி வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் மத்திய மந்திரிகளின் குழு ஆலோசனை நடத்தியது. இதற்காக ஒவ்வொரு மந்திரிகளாக அங்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் அங்கு வந்த மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் காலில் விழுந்தனர்.

தயவு செய்து ஆந்திராவை காப்பாற்றுங்கள். தெலுங்கானாவை பிரிக்க வேண்டாம், தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் என்று அவர்கள் கெஞ்சினார்கள். எம்.எல்.ஏ.க்கள் திடீரென காலில் விழுந்ததை பார்த்து ஜெய்ராம் ரமேஷ் திகைப்படைந்தார். அங்கு உடனடியாக வந்த பாதுகாவலர்கள் ஜெய்ராம் ரமேஷை மீட்டு பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.சிறிது நேரத்தில் அங்கு மத்திய மந்திரி நாராயணசாமி வந்தார். அவரது காருக்கு முன் ஒரு எம்.எல்.ஏ. தரையில் படுத்து உருண்டார். அப்போது சில எம்.எல்.ஏ.க்கள் அவரது காரின் மேல் இருந்த சிவப்பு விளக்கை சேதப்படுத்தினார்கள்.

ஆந்திர சட்டசபை ஒப்புதல் இல்லாமல் தெலுங்கானா மசோதாவை பாராளுமன்றத்தில் வைப்பது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கேசவ் எம்.எல்.ஏ. கூறினார். இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி