அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…

தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்…

தெலுங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்… post thumbnail image
புதுடெல்லி:-பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்பட உள்ளன. இவற்றில் முக்கியமானது தெலுங்கானா மசோதாவாகும். ஆனால், ஆந்திரபிரதேசத்தை இரண்டாக பிரிக்கும் இந்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டசபை விவாதம் மற்றும் தீர்மானம் அடங்கிய அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் குழு தெலுங்கானா வரைவு மசோதாவிற்கு இறுதி வடிவம் கொடுத்து அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் இம்மசோதாவில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் இம்மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருத்தப்பட்ட இவ்வரைவு மசோதாவில் சீமாந்திராவிற்கான தலைநகரை உருவாக்குவதற்கான சிறப்பு பொருளாதார திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இம்மசோதா குறித்து வருகிற வியாழக்கிழமை மக்களவையில் விவாதிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், “இந்த முறை தெளிவான தெலுங்கானா வரைவு மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி