அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு…

தே.மு.தி.க., தனித்து போட்டி? கூட்டணியா ? விஜயகாந்த் பரபரப்பு பேச்சு… post thumbnail image
உளுந்தூர்பேட்டை :-விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய ‘ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்” தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறஞ்சியில் இளைஞர்கள் கடல் இங்கே இருப்பதைக் காண முடிகிறது.அருகில் உள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி மக்களுக்கு எனது நன்றி. இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் இளைஞர் கூட்டம்.மக்களுக்கு நல்லது செய்யும் போலீஸ் வேடத்தை அதிக படத்தில் ஏற்று நடித்தேன். இதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன். போலீஸ் துறை, இந்த மாநாட்டை நடக்க விடாமல் செய்ய அனைத்து வேலைகளையும் செய்தனர். இந்த மானம் கெட்ட பிழைப்புக்கு தூக்கு போட்டு சாகலாம். ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்துகிறோம். இதற்கு அனுமதி மறுக்கின்றனர். தமிழகத்தில் திருடன், கொலைகாரனை வளர்த்து விடும் வேலையை ஜெ., செய்கிறார்.வரும் 24ம் ததேி ஜெ., பிறந்த நாளில் பேனர் கட்டுவார்களே, அதை போலீஸ் தடுப்பார்களா. தமிழகத்தை பாதுகாக்கும் செயலை ஜெ., செய்யவில்லை. இங்கு
கூடியிருக்கும் கூட்டத்தை நான் தூண்டிவிட மாட்டேன்.ஆண்ட, ஆளும் கட்சிக்கு அடித்து கூறுகிறேன். தே.மு.தி.க., மாற்றுக்கட்சியாக செயல்படும் என்பதை மறந்து விடக்கூடாது. பேனர் கட்டும் கயிறு எனது தொண்டனின் நரம்பு.

பணக்காரனிடம் ஊழல் இருக்க கூடாது. இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள். லஞ்சம் இருந்தால் நாடு உருப்படாது. மாடுகளை தாக்கிய கோமாரி நோயை தீர்க்க ஆள் இல்லை. இந்நோய் தாக்கி 1 லட்சம் கால்நடைகள் இறந்து உள்ளது. நாட்டை திருத்த விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். எனது கட்சியில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர்.இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பெயர் மாற்றி பெரும் ஊழல் நடந்து வருகிறது.பத்திரிகையில் என்னை பற்றி எது எழுதினாலும் நான் கவலைப்படமாட்டேன். சட்டசபைக்கு ஏன் போகவில்லை என்று பலர் கேட்கின்றனர். அங்கே எதையும் பேச விடுவதில்லை. அதிக எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க,. வில் உள்ளதால் அவர்களே பேசிக்கொள்கின்றனர். மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. ஆனால், அ.தி.மு.க., அரசு இளைஞர்களை கெடுக்க டாஸ்மாக் திறந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விவசாய பூமி. இங்கு 70 சதவீதம் விவசாயம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை மூலம் டார்கெட் பிக்ஸ் செய்து 300 கோடி, 350 கோடி ரூபாய் என்று விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

விவசாயிகள் வருவாய் பெருக்க எந்த டார்கெட்டையும் அரசு நிர்ணயிக்க வில்லை. சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் தொகையே 1.25 லட்சம் கோடிதான். இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீருக்கு விலை வைத்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.கூட்டணி கட்சி என்றால் சட்டசபையில் ‘ஜிங்ஜாங்’ போடுவதற்கு அல்ல. தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். நான் தலை குனிந்தாலும் எனது தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன். பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு குறித்து பேசியது தவறு என்று ஜெ., நினைக்கிறார். பென்னாகரத்தில் டெபாசிட் இழந்த ஜெ., எங்களால் தான் தே.மு.தி.க., வெற்றிபெற்றது என்று வீண் பிரசாரம் செய்கிறார்.ஆனால் தி.மு.க., ஆட்சியில் நடந்த 13 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வியை தான் கண்டது. கூடங்குளம் மக்களை ஏமாற்றும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறி ஏமாற்றினார். ஆனால் அந்த பகுதியில் இதுவரை ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டவில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் ஜெ., வின் பழக்கம். ஜெ., வின் செயலால் வாஜ்பாய் படுத்த படுக்கையாய் போனார். இரு பெண்களால் தான் அவர் பதவி இழந்தார்.இலங்கை தமிழர் கண்ணீரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஜாதி, மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது.

40 சீட்டையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று ஜெ., நினைக்கிறார். ஆனால் பணத்திற்காக மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்க மாட்டார்கள். தே.மு.தி.க.,வில் எதிரிகளை மன்னித்து விடுவோம், துரோகிகளை மன்னிக்க மாட்டோம். குள்ளமாக இருக்கும் ஜெ., வுக்கு உயரமாக இருக்கும் ஆண்கள் குனிந்துதான் வணக்கம் சொல்ல வேண்டும்.இந்த ஆட்சியில் இரண்டு மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் பதவியில் இருக்கமுடியவில்லை. இதனால் துறைகள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை உணர்ந்து போலீஸ் துறை எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பில் ஜெ., சிக்கி தவிக்கிறார்.நான் உண்மையை பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால், என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்கலாம் என்கின்றனர். கடந்த முறை கூட்டணி வைத்து பட்ட அடி போதும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி