Vairamuthu

திரைப்படப்பாடல், திரையுலகம், பாடல்கள்

உன்னைத்தானே தஞ்சம்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்உன்னைத்தானே…. மலரின் கதவொன்று திறக்கின்றதாமௌனம் வெளியேற தவிக்கின்றதாபெண்மை புதிதாக துடிக்கின்றதாஉயிரில் அமுதங்கள் சுரக்கின்றதாமுத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானேஇரவுகள் இதமானதா?கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்வெட்கம் என்ன சத்தம் போடுதா? என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிடுவிழி நீர் தெளித்து ஒரு கோலமிடுஎன்னைத்தானே… உலகம் எனக்கென்றும் விளங்காததுஉறவே எனக்கின்று விலங்கானதுஅடடா முந்தானை சிறையானதுஇதுவே என் வாழ்வில் முறையானதுபாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயேஉறவுக்கு உயிர் தந்தாயேநானே எனக்கு நண்பன் இல்லையேஉன்னால் ஒரு சொந்தம் வந்தது என்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிடுவிழி நீர் தெளித்து ஒரு கோலமிடுஎன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

செய்திகள், திரையுலகம்

திருப்புமுனையை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘புலி’ படம்!…

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில், நடிகர் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ’புலி’. இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்ததே இல்லை என இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே படத்தின் பாதி ஷுட்டிங்குகளே நடந்து முடிந்துள்ள நிலையில் படத்தின் கேரள உரிமம் மிகபெரும் தொகைக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த கட்டமாக படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்திற்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். நடிகை ஹன்சிகா தற்போது விஜய் நடிக்கும் புலி, உதயநிதியின் இதயம் முரளி, சிம்புவின் வேட்டை மன்னன், ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் என பல படங்களை கையில் வைத்து உள்ளார். ஆனால் புலி படம் தனது வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும் என்கிறாராம். மற்ற படங்களை காட்டிலும் இந்த படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வகையில் ராஜா காலத்து இளவரசி வேடம் என்பதில் ஏக குஷியில் உள்ளார். என்னிடம் பல படங்கள் கையில் இருந்தாலும் என் மார்க்கெட்டை நிலை நிறுத்த போகும் ‘புலி’ தான் என்று சொல்கிறார்.

செய்திகள், திரையுலகம்

‘விஜய் 58’ படத்தில் முதன் முறையாக இணையும் இசை கூட்டணி!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், முதன் முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல பாடலாசிரியரிடம் பணிபுரியவுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான். இவர் வரிகளுக்கு தேவி ஸ்ரீ இசையமைப்பது இதுவே முதன் முறை. இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே முடிந்த நிலையில் மற்ற பாடல்களுக்காக டியூன் அமைத்து வருகிறாராம் தேவி ஸ்ரீ பிரசாத்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…

சென்னை:-தேசிய விருது கவிஞரான வைரமுத்து தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் வானளாவிய பங்களிப்பை அளித்திருக்கிறார். எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞருக்கான எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுக்கு கவிஞர் வைரமுத்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்த விருது வழங்கும் விழா வருகிற அக்டோபர் 12ம் தேதி நடைபெறவிருக்கிறது.

செய்திகள், திரையுலகம்

மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரிக்கும் நடிகை நமீதா!…

சென்னை:-எந்த சினிமா மேடைகளில் தோன்றினாலும், எதிரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களைப்பார்த்து ஹேய் மச்சான்ஸ் என்றுதான் தனது பேச்சை ஆரம்பிப்பார் நடிகை நமீதா. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் தமிழ்நாட்டு மச்சான்ஸ் அனைவரும் புது எனர்ஜி வந்தது போன்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அதையடுத்து, குஷியாக எதையாவது தப்பும் தவறுமாக பேசி விட்டு வந்து இருக்கையில் அமருவார் நமீதா. ஆனால், இந்த மச்சான்ஸ் விசயத்தை ஒரு விழாவின்போது, வைரமுத்து உள்ளிட்ட சில சீனியர்கள் அமர்ந்திருந்தபோது, எதிரில் இருக்கும் மச்சான்களுக்கும், மேடையில் அமர்ந்திருக்கும் மச்சான்களுக்கும் வணக்கம் என்று பேசத் தொடங்கினார் நமீதா. அதைக்கேட்டு, மேடையில் இருந்த பெருசுகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து விட்டனர்.இருப்பினும், அந்த இடத்தில் அவரிடம் என்ன சொல்ல முடியும் என்று தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருந்தனர். அதையடுத்து, தான் செய்த தவறை பற்றி மற்றவர்கள் சொன்னதையடுத்து, சிலகாலம் மச்சான்சுக்கு மூடு விழா நடத்தியிருந்த நமீதா இப்போது மறுபடியும் மச்சான்ஸ் என்று மேடைக்கு மேடை பேசத் தொடங்கி விட்டார். இப்படி வார்த்தைக்கு வார்த்தை மச்சானையும் கலந்து அவர் பேசுவதால், அதுவரை அமைதியாக நடந்து கொண்டிருககும் விழாவில் நமீதா வாயை திறந்ததும் களைகட்டத் தொடங்கி விடுகிறது. இதனால இதற்காகவே இப்போது சிலர் நமீதாவை விழாக்களுக்கு அழைத்து வருகிறார்கள். அதனால் கவர்ச்சிகரமாக உடையணிந்து மப்பும் மந்தாரமுமாக மேடைகளை அலங்கரித்து வருகிறார் நமீதா.

செய்திகள், திரையுலகம்

மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அமர்க்களம் படத்திற்கு அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன் -என்றொரு வசன வடிவிலான ஒரு அதிரடி பாடல் இடம்பெற்றிருந்தது. அதில் அஜீத், ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.அதேபோல் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்திலும் வசன நடையில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். ஆனால், அமர்க்களம் பாடல் போன்று உருவாக்க நினைத்த அந்த பாடலை, ஹாரிஸ் ஜெயராஜ் தனது பாணியில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க பாடல் போன்று கம்போஸ் செய்திருக்கிறாராம். இந்த பாடலின் இடையிடையே அதிரடியான மாஸ் வசனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாம். அதனால் அஜீத் ரசிகர்களுக்கு இந்த பாடல் பெரிய விருந்தாக அமையும் என்கிறார்கள்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…

சென்னை:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்தது.இந்தப் போட்டியில் இந்தியா – இலங்கை – அமெரிக்கா – கனடா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா – மலேசியா – சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. சிறந்த நூலைத் தேர்வுசெய்ய அறிஞர்களைக் கொண்ட ஐவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. புவி வெப்பமாதல் – உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதனாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதனாலும், மொழிவளம் – வெளிப்பாட்டு உத்தி – உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல் – இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் என்ற சிறப்புகளாலும் “மூன்றாம் உலகப்போர்” சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நடுவர் குழு அறிவித்திருக்கிறது. பரிசுக்கான அறிவிப்பை கோலாலம்பூரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்தார். அறக்கட்டளை நிறுவனர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் உடனிருந்தார்.இந்தப் பரிசு குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது: டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நிகழ்த்திய புத்தகப்பரிசுப் போட்டியில் நான் எழுதிய “மூன்றாம் உலகப் போர்” பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்குப் பெருமகிழ்வு தந்தது; பெருமிதமும் தந்தது. தமிழ் இலக்கியத்திற்கு உலகளவில் வழங்கப்படும் ஞானபீடம் என்று இதனைக் கருதுகிறேன். இந்தப் படைப்பு காலத்தின் வெற்றிடத்தை நிரப்பும் கருத்தோடு எழுதப்பட்டது. புவி வெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக வேளாண்மையின் நசிவுதான் இதன் உள்ளடக்கமாகத் திகழ்கிறது. அடுத்த நூற்றாண்டில் பூமிப்பந்துக்கு நேரும் பேராபத்தைக் கருத்தில்கொண்டு உலக மானுடச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதுதான் என் உயிர்த்தீயின் வெப்பமாக இருந்தது. அதனைப் புரிந்துகொண்டதற்கும் என் வலியை உணர்ந்து கொண்டதற்கும், உலக மானுடம் குறித்துக் கவலை கொண்டதற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த சர்வதேசப் பெருமையை தமிழுக்காக எழுதுகோல் ஏந்திய என் முன்னோடிகளின் காலடிகளில் காணிக்கை செய்கிறேன்.” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.செப்டம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பரிசு வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசினைப் பெற்றுக்கொள்கிறார்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவலுக்கு சர்வதேச விருது…!

10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை இந்த உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் சிறந்த நூலைத் தேர்வு செய்ய ஐந்து பேர் கொண்ட அறிஞர்கள் குழுவும் அமைக்கப்பட்டது. புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட உலகக் குரல் என்பதாலும், முன்மாதிரி இல்லாத முதற்படைப்பு என்பதாலும், மொழிவளம், வெளிப்பாட்டு உத்தி, உழவியல் வாழ்வை ஊடறுத்துச் சொல்லும் உளவியல், இனிவரும் நூற்றாண்டு எதிர்கொள்ளவேண்டிய கருதுகோள் போன்ற சிறப்புகளாலும் “மூன்றாம் உலகப்போர்” சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் குழு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று கோலாலம்பூரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்தார். அறக்கட்டளை நிறுவனர் டான் ஸ்ரீ சோமசுந்தரம் உடனிருந்தார். தன்னுடைய நாவலுக்கு கிடைத்திருக்கும் பரிசு குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது: ”டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நிகழ்த்திய புத்தகப்பரிசுப் போட்டியில் நான் எழுதிய “மூன்றாம் உலகப் போர்” நாவல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்குப் பெருமகிழ்வு தந்தது; பெருமிதத்தையும் கொடுத்தது. தமிழ் இலக்கியத்திற்கு உலகளவில் வழங்கப்படும் ஞானபீடம் என்று இதனைக் கருதுகிறேன். இந்தப் படைப்பு காலத்தின் வெற்றிடத்தை நிரப்பும் கருத்தோடு எழுதப்பட்டது. புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக வேளாண்மையின் நசிவுதான் இதன் உள்ளடக்கமாகத் திகழ்கிறது. அடுத்த நூற்றாண்டில் பூமிப்பந்துக்கு நேரும் பேராபத்தைக் கருத்தில்கொண்டு உலக மானுடச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது தான் என் உயிர்த்தீயின் வெப்பமாக இருந்தது. அதனைப் புரிந்துகொண்டதற்கும் என் வலியை உணர்ந்து கொண்டதற்கும், உலக மானுடம் குறித்துக் கவலை கொண்டதற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். இந்த சர்வதேசப் பெருமையை தமிழுக்காக எழுதுகோல் ஏந்திய என் முன்னோடிகளின் காலடிகளில் காணிக்கை செய்கிறேன்.” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். செப்டம்பர் 5ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பரிசு வழங்கப்படுகிறது. கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசைப் பெற்றுக்கொள்கிறார்.

செய்திகள், திரையுலகம்

கவிஞர் வைரமுத்துவிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினி!…

சென்னை:-கவிஞர் வைரமுத்து சமீபத்தில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கோவையில் பொதுக்கூட்டம், பேரணி என்று விழா நடத்திய வைரமுத்து, அதன்பின் சிலநாட்கள் கழித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஏற்கெனவே முதுகுவலியால் அவதிப்பட்ட வைரமுத்து, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட காரணத்தினால் மேலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆகையால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பிய வைரமுத்துவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவர் பூரண குரணமடைய இறைவனை தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ரஜினியை வைரமுத்து நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், திரையுலகம்

இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…

சென்னை:-தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்ததும் செம டென்ஷனாகிவிட்டாராம் இளையராஜா. தன் கோபத்தை, இளையராஜா ஃபேன்ஸ் கிளப் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தன்னுடைய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இளையராஜாவின் ஒப்புதலுடன் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் வெளியிட்ட அந்த செய்தியில், வைரமுத்து அதிகபட்சமாக சாடப்பட்டிருக்கிறார். வைரமுத்துவையும் இளையராஜாவையும் கை குலுக்க வைக்கும் இணைப்பு முயற்சியை செய்த சீனு ராமசாமியையும் இளையராஜாவின் கோபம் விட்டு வைக்கவில்லை. அவரும் அநியாயத்துக்கு கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சம்மந்தமேபடாத இயக்குநர் பாலாவுக்கும் அந்த அறிக்கையில் அர்ச்சனை நடத்தப்பட்டிருந்தது.அதாவது, தாரை தப்பட்டை படத்தில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்க முயற்சி செய்தாராம் பாலா. அதற்கு கடுமையாய் ரியாக்ட் பண்ணி இருக்கிறார் இளையராஜா. இயக்குநர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன் பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா. என்று அந்த அறிக்கையில் பாலாவையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் அமைப்பினர். இவ்விஷயம் பாலாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கடுப்பான பாலா இது குறித்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தை பதிவு செய்தாராம்.

Scroll to Top