அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!

சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!

சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது! post thumbnail image

தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னது எதிரொலிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் பிரச்னையை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது மேலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கவேண்டும், இசுலாம் மதத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவில் மதம் பார்த்து கொரோனா கிருமி பரவுவதில்லை என்று கீச்சில் பதிவிட்டிருக்கிறார் கீச்சு மூலம் கூறியிருந்தார். சம காலத்தில் நடந்த நடந்த இந்த இரு நிகழ்வுகள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தப்லிகி ஜமாத் கூட்டத்துக்குப் போயிருந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு ஒரு சிலர் டிவிட்டரில் தொடர்ந்து பதிவு போட்டு வந்தார்கள். மேலும் இந்தியர்களால்தான் இன்று துபாய், போன்ற நகரங்கள் பெரிய நகரமாக விளங்குகின்றன என்பது போலவும் மத்திய கிழக்கில் இந்துக்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்றும் கீச்சில் பதிவுகளை போட்டிருந்தனர். சவூதி இளவரசியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர்கள் தனது டிவிட்டர் அக்கவுண்ட்டையே விட்டு காணாமல் போய்விட்டனர்.

சமீபத்தில் இசுலாமிய நாடுகளின் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் களம் இறங்கியது. இந்தியாவில் இசு லாமியர்களை மத ரீதியாக துன்புறுத்துவதை கைவிட வேண்டும் மேலும் இசுலாமியர்களை அவதூறாக சித்தரித்து சிலர் நடத்துவதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவில் இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வருவது கவலை தருகிறது என்று அந்த அமைப்பு கூறியிருந்தது.

சென்ற வருடமே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இசுலாமியருக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியர்களை பாதிக்கும் என்று கூறியிருந்ததை கட்சியின் உறுப்பினர்கள் சிறு காணொளியாக வலைத்தளங்களில் பகிர்ந்து பெரும் நெருக்கடியை பாரதீய சனதா ஆட்சிக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி