March 6, 2019

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

நலம் தரும் தாவரங்கள்-பிரண்டை

இதயம் காக்கும் !பசியின்மையை போக்கும்!வாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை! பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு . இது கொடி வகையைச்சார்ந்தது.இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக்காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக்காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது . இதன் சாறு உடலில் பட்டால் அரிப்பையும், நமச்சலையும் ஏற்படுத்தும் .இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. அடிபட்ட வீக்கம் , சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது . துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். ஞாபக சக்தியை பெருக்கும் , மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு சக்தி தரும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும் வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெரும் ,உடல் வனப்பும் கூடும். எலும்புகள் சந்திக்கக்கூடடிய இணைப்புப்பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால் , தேவையற்ற நீர் தேங்கி விடும் .இதன் காரணமாக பலர் கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுவார்கள் . மன‍ழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால் , வயிறு செரிமான சக்தியை இழந்து விடும் அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டி விடும் .அஜீரணக் கோளாறுகளைப் போக்கும் .

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

மலையாளம்: தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் மலையாள வினைகளில் இல்லை. இது ஏனைய திராவிட மொழிகளுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடாகும் இதனைத் தமிழோடு ஒத்த இன மொழி என்பதை விட , தமிழின்(மிகத்திரிந்த) கிளை மொழி என்று கொள்வது பொருந்தும் என்பார் கால்டுவெல். இம்மொழி தொடக்கத்தில் தமிழின் தங்கையாக அல்லாமல் , மகளாக இருந்த மொழி என அவர் கூறுகிறார். தொடக்கத்தில் சேரநாட்டில் தமிழே பேச்சு மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் இருந்தது.பின்னர் இப்பகுதிக்குத் தமிழ்நாட்டுடன் உறவு குறைந்தமையாலும் வட மொழிச்சார்பு மிகுந்தமையாலும் மிகமித்திரிந்து வேறொரு மொழியாக வளர்ந்தது. அவ்வாறு வளர்ந்த மொழியே மலையாளம் .இது புதிதாக வந்த வேற்று மொழியன்று , அந்நாட்டுத் தமிழ் திரிந்த திரிபே ஆதலின் கிளைமொழி என்பர் கால்டுவெல். இதனால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்றுண்டு . பழந்தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே ஒரு வகையாகத் திரிந்து தெலுங்கு மொழியாயிற்று . மேற்கே மற்றொரு வகையாகத்திரிந்து கன்னட மொழியாயிற்று, சேர நாட்டில் பிரிதொரு வகையாகத்திரிந்து மலையாள மொழியாயிற்று.இதுவே மொழியியல் கொள்கைக்குப் பொருந்தியதாகும். காலப்போக்கில் வட மொழிக்கலப்பால் மலையாளம் மிகவும் வேறுபட்டுவிட்டது . மலையாளத்தின் பழைய இலக்கியம் தமிழ் இலக்கியம் போன்றதே .தமிழர்களுக்கு விளங்கும் மொழியாகவே பழைய மலையாளம் உள்ளது. மலையாளத்தின் முதல் இலக்கியம் இராமசரிதம் ,இது தமிழ் ஒலியாலாகிய தமிழ் இலக்கியம் போலவே உள்ளது. பழைய மலையாள இலக்கியத்தில் தமிழ் மொழியில் உள்ள 12 உயிரும் 18 மெய்யும் மிகுதியாக உள்ளன. கிரந்த எழுத்தையொட்டி மலையாளத்திற்கு எழுத்துக்கள் அமைந்ததால் பிற்காலத்தில் மற்ற ஒலிகளும் மிகப் பயின்று கலந்தன. வடசொற்கலப்பும் மிகுந்தது. இம்மாறுதல்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையாகும்.

சங்ககாலம், முதன்மை செய்திகள்

சங்க காலக் குறிப்புகள்-பகுதி3

கடைச்சங்கம்: இருந்த இடம்:(இன்றைய) மதுரை (வையை ஆற்றங்கரை) ஆதரித்த அரசர்கள்: முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி வரை 49 பேர் . பாடிய மன்னர்கள்: 3பேர். காலம்: 1850 ஆண்டுகள். இருந்த புலவர்கள் :49 பேர் . பாடிய புலவர்கள் :449 பேர் . நூல்கள்: நெடுந்தொகை , குறுந்தொகை , நற்றிணை , புறநானூறு , ஐங்குறுநூறு ,பதிற்றுப்பத்து , கலி , பரிபாதல் , கூத்து , வரி , குற்றிசை , பேரிசை . புலவர்கள்: சிறு மேதாவியார் ,சேந்தம் பூதனார் ,அறிவுடையார் ,பெருங்குன்றூர்க்கிழார் ,இளந்திருமாறன் ,மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் , மருதனிள நாகனார் , மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் . இலக்கணம்:அகத்தியம் , தொல்காப்பியம் . தொடரும்………..

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

மைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி சிமோனி. இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார். தனது 23வது வயதில் (பியெட்டா)அன்னை மேரி ,இயேசு ஆகிய இருவரது உருவங்களையும் ஒரே பளிங்குக் கல்லால் செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் . அதன் பிறகு , 17 அடி உயரத்தில் டேவிட் சிற்பத்தை உருவாக்கினார். இந்தச் சிற்பம் இவரது புகழை நிலைநிறுத்தியது. இவர் எழுதிய கவிதைகளில் சுமார் 300 கவிதைகள் பத்திரப்படுத்தப்பட்டிருக்கின்றன . மேலை பரபில் இலக்கியத்திற்கு ஷேக்ஸ்பியர் , இசைக்கு பீத்தோவன்என்று ஒவ்வொரு துறையிலும் மகத்தான சாதனை புரிந்தவர்களின் வரிசையில் , சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்த மைக்கலாஞ்சலோ தனது 88வது வயதில் (1564) மறைந்தார்.

இதர பிரிவுகள், முதன்மை செய்திகள்

முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)

வாலண்டினா டெரஷ்கோவா முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரஷ்கோவா 1937ஆம் ஆண்டுமார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் ,மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தப்படியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக் கடினமான பயிற்சிகளுக்கு பிறகு 25 வயதான வாலண்டினா தேர்வு செய்யப்பட்டார். வோஸ்டாக் -6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது.இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணி நேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார். இவர் ஹீரோ ஆஃப் சோவியத்யூனியன் என்ற பதக்கம் , லெனின் விருது மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும் அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்தவர் என்ற பட்டத்தையும் பெற்ற பெருமைக்குரியவர்.

திரையுலகம், பரபரப்பு செய்திகள்

சென்னையில் பதற்றம்-ரஜினி அதிர்ச்சி

ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கோவை வாலிபரிடம் விசாரணை: சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார் . சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினி காந்த் வீட்டிலும் வெடுகுண்டு வெடிக்கப்போகிறது என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார் . உடனடியாக சோதனை செய்ததில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை . இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் , அந்த மர்ம நபர் கோவையைச் சார்ந்தவர் என்றும் அவருடைய பெயர் முகமது அலி என்பது தெரியவந்துள்ளது.அவர் மன‍அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Scroll to Top