கன்னடம்:
கர் நாடக மாநிலத்திலும், மராத்தி நாட்டின் தென் பகுதியிலும் பேசப்படும் மொழி இது .நீலகிரியில் உள்ள படகர் பேசுவது பழைய கன்னடம்.
வட மொழி மோகம் மிக்கவர்கள் கர்நாடகம் திரிந்நு கன்னடம் ஆயிற்று என்பர். டாக்டர் குண்டர்ட் என்பவர் கரு+நாடு+அகம்=கருநாடகம் என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு என்பர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த கன்னடம் தமிழ் போலவே அமைந்திருந்தது. இது ஹள கன்னடம் (பழங் கன்னடம் )எனப்படும். இன்று உள்ளது ஹொச கன்னடம் எனப்படும் . இதன் எழுத்து முறை தெலுங்கையொட்டி அமைந்தது. தெலுங்கு போல வட மொழிக்கலப்பு மிக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி