இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் நலம் தரும் தாவரங்கள்!

நலம் தரும் தாவரங்கள்!

நலம் தரும் தாவரங்கள்! post thumbnail image

துளசி:

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம் . துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல்,வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும் , புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

துளசி இலைக்கு மன இறுக்கம் , நரம்புக்கோளாறு, ஞாபகச்சக்தி இன்மை ,ஆஸ்துமா ,இருமல் மற்றும் பிற நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.துளசி இலைச்சாறில் தேன்,இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி