பல கருவிகளை கண்டறிந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் 1877ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார்.
மார்கன் , சிறுவயதிலேயே படிப்பை கைவிட்டார் . பல இடங்களில் கூலி வேலை செய்து வந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூசன்சேர்ந்து கல்வி கற்றார்.
இவர் தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கானவழியை கண்டுபிடித்த பிறகு , மிகவும் பிரபலானார். 1907ஆம் ஆண்டு தையல் இயந்திரம் , ஷூ பழுது பார்க்கும் கடையை தொடங்கினார் .படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார் .
1914ஆம் ஆண்டு புகை , நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார் . சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம்,சீப்பு,கூந்தல் சாயம் போன்ற அழகு சாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.
எளிமையான , திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதை பயன்படுத்தி விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.
100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ் என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
தன் உழைப்பாலும் திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து , பல சாதனைகளை படைத்த கர்ரெட் மார்கன் தனது 86வது வயதில் (1963) மறைந்தார்.