பரபரப்பு செய்திகள் பரபரப்பான மாவட்டச்செய்திகள்

பரபரப்பான மாவட்டச்செய்திகள்

பரபரப்பான மாவட்டச்செய்திகள் post thumbnail image
  • சென்னை மாநகராட்சியில் உள்ள மசாஜ் சென்டர்களை முறைப்படுத்தும் நோக்கில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
  • தஞ்சை மாநகரில் 14 இடங்களில் ரூ. 2.58 கோடி மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதாரம் பாதுகாத்தல் பணி விரைவில் துவங்கவுள்ளது.
  • அம்மா உணவகங்களில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
  • தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க தொகுதிப்பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சு வார்த்தையில் 2 தொகுதிகள் வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது.
  • சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி