- நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி.
- உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு
- வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி கரமானது. அருகில் இருந்து பார்க்கும் போது துயரமானது-சார்லி சாப்ளின்.
- உலகம் பொறுமை, பொறாமை என இருவேறாகப் பிரிந்து, நின்றாலும் பொறுமையே பொறாமையை வெல்லும் என்பது உறுதி.-திரு.வி.க.
- திறமையின் மூலம் புகழ் பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒருவன் சிறந்த மனிதனாக முடியும்.– ஆபிரகாம் லிங்கன்.
- மற்றவர்களை எடை போடுவதில் காலத்தை வீணாக்க வேண்டாம்.ஏனெனில் அவர்களை நேசிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லாமல் போகும்.- அன்னை தெரசா.
- அறிவுக்கே தெரியாத பல காரணங்கள் இதயத்தில் இருக்கின்றன.-பாஸ்கல்.
- உலகத்தை வெல்வதைவிட சுயநலத்தை வெல்வதே சிறந்த வெற்றி.- புத்தர்.
பரபரப்பான ஒரு நிமிடம்
Categories: