தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார்.
இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ” தியாகராஜன் ஒரு பாகவதர்” என்று விழாவில் மிருதங்க வித்துவான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார் அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்து கொண்டது.
திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார்.அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது.படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி 3தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
தமிழ்த் திரைப்படத்துறையில் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வது வயதில் (1959) மறைந்தார்.
இன்று அவருடைய பிறந்த நாள்.மண்ணை விட்டு மறைந்தாலும் திரையுலகில் நீங்காமல் இடம் பிடித்த ஜாம்பவான்!