செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள் post thumbnail image

2011-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான, பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது

இயல் பிரிவு: பாரதி விருது பெறுபவர்கள் 1) புலவர் புலமைப்பித்தன் 2) கவிஞர் சுப்புஆறுமுகம் 3) எழுத்தாளர் சிவசங்கரி.

இசை பிரிவு : எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெறுபவர்கள் 1) எஸ்.ஜானகி 2) பாம்பே சகோதரிகள் லலிதா 3) சரோஜா 4) டிவி.கோபாலகிருஷ்ணன் 5) சசிரேகா 6) மாலதி உன்னி மேனன்

பரதநாட்டியம் :பாலசரஸ்வதி விருது பெறுபவர்கள் 1) வைஜயந்தி மாலா 2) சி.வி.சந்திரசேகர் 3) தனஞ்செயன் கலைமாமணி விருது லேனா தமிழ்வாணன் , வாசுகி கண்ணதாசன்

நடிகர்கள்: 2017-ம் ஆண்டிற்கான விருதை பெறுபவர் விஜய் சேதுபதி மேலும் கார்த்தி, பிரசன்னா, பொன் வண்ணன், பிரபுதேவா, சரவணன், ராஜசேகர், ஆர்.ராஜிவ்,பாண்டு, ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ரா லட்சுமணன். நகைச்சுவை நடிகர் சந்தானம், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சிங்கமுத்து

பாடகர்கள்: கானா பாலா, கானா உலகநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் சுதா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, நாட்டுப்புற கலைஞர்கள் பரவை முனியம்மா, வேல் முருகன் இயக்குனர்கள் ஹரி, டி.பி.கஜேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பவித்ரன்

நடிகைகள்: பிரியாமணி, குட்டி பத்மினி, நளினி, குமாரி காஞ்சனா தேவி, பழம் பெரும் நடிகை பி.ஆர்.வரலட்சுமி, சாரதா, நிர்மலா பெரியசாமி, பரதநாட்டிய கலைஞர் பிரியா முரளி, நடிகர் சிவன் சீனிவாசன் உட்பட 201 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அரசு விழாவில் முதல்வர் பழனிச்சாமி வழங்க உள்ளார். விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் சான்றிதழ் வழங்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி