அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல் post thumbnail image

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுவிட்டன. இதே போன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுவிட்டன .மதிமுக,விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் பெரிய கட்சியாக கருதப்படும் தேமுதிக தற்போது வரை எந்த கூட்டணியிலும் இணையவில்லை.கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற முயற்சியில் அதிமுகவும் திமுகவும் ஈடுபட்டது.இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி