சென்னை:-வித்தியாசமான கதாபாத்திரத்திலும், அசாதாரனமான வேடங்களிலும் துணிச்சலாக நடிக்க கூடியவர் நடிகை சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் நடித்து வரும் படம் ஜோதிலட்சுமி. இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. சண்டையில் ஒருவர் ஹாக்கி பேட்டால் சார்மியின் தலையில் அடிப்பது போல் ஒரு காட்சி.
இந்த காட்சி படமாக்கப்படும் போது அந்த நபர் ஹாக்கி பேட்டால் சார்மியின் தலையில் வேகமாக அடித்திருக்கிறார். இதனால் ரத்த காயம் அடைந்த சார்மி மயங்கி விழுந்திருக்கிறார். உடனே படக்குழுவினர் சார்மியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தற்போது சார்மி குணமடைந்துவருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி