புதுடெல்லி:-ஒரு நாள் போட்டி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலக சாம்பியன் ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 3-வது முதல் 7-வது இடங்களில் முறையே தென்ஆப்பிரிக்கா (112 புள்ளி), இலங்கை (108), நியூசிலாந்து (107), இங்கிலாந்து (101), பாகிஸ்தான் (95) ஆகிய அணிகள் உள்ளன. இதில் நாளை தொடங்கும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தால் 7-வது இடத்தையும் இழக்க நேரிடும்.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் விராட் கோலி 4-வது இடத்திலும், ஷிகர் தவான் 6-வது இடத்திலும், கேப்டன் டோனி 8-வது இடத்திலும் உள்ளனர். அதே சமயம் டாப்-10 பந்து வீச்சாளர்களில் இந்தியர்கள் யாருக்கும் இடமில்லை. இதில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் இருக்கிறார். இந்திய தரப்பில் சிறந்த நிலையில் முகமது ஷமி 11-வது இடத்தில் உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி