கோவிலுக்கு செலவு செய்வதாக பகதர்களிடம் பொய் சொன்ன அண்ணாமலை அதனை பலமுறை உபயோகித்து உள்ளார். இதனால், பக்தர்கள் தங்களது கிரெடிட் கார்டுக்கு பணம் கட்டும்போது சந்தேகமடைந்தனர். அப்போது, கிரெடிட் கார்டு செலவு குறித்து அவர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாமியார் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவில் மூலமாகவும், கிரெடிட் கார்ட்டு மூலமாகவும் கிடைத்த பணம் அனைத்தையும் அண்ணாமலை தனது சொந்த செலவுக்காக பயன்படுத்திக் கொண்டு ஆடம்பரமான வீடுகள், நிலங்கள் மற்றும் பல சொகுசு கார்களை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள வங்கியிலும் இந்தப் பணத்தை சேமித்து வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் வரி மோசடி தொடர்பான இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நீதிபதி, சாமியார் அண்ணாமலையை குற்றவாளி என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி