செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!…

ஐ.பி.எல்: பாக்னரின் அதிரடியால் ராஜஸ்தான் வெற்றி!… post thumbnail image
புனே:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் புனேயில் நடந்தது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. துவக்க வீரர் ரகானே 8 பந்துகளை எதிர்கொண்டும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதை தொடர்ந்து வந்த வீரர்களும் ரன் குவிக்கமுடையாமல் அவுட்டாகி நடையை கட்டினார்.

இந்த சூழ்நிலையில் அதிரடியாக விளையாடிய ஹூடா 15 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் குவித்து அனுரீத் சிங் பந்தில் போல்டாகி வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 126 ஆக இருந்தது. இதேபோல், மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பாக்னர் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் முரளி விஜய் 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்லும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து பாக்னர் பந்துவீச்சில் கேட்சானார். அதன் பிறகு வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இதனால் 20 ஒவர் முடிவில் 8 விகெட்டுகளை இழ்ந்து 136 ரன்களை மட்டுமே பஞ்சாப் எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பாக்னர் அபராமாக பந்து வீசிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் பரிசை தட்டி சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி