பாரிஸ்:-பிரான்சில் பணி மற்றும் ஓய்வு பெறும் வயது தொடர்பான விதிமுறைகளுக்கு எதிராக விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிகப்பெரிய சங்கமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேசிய சிண்டிகேட் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கியது.
இதன் காரணமாக இன்று நாடு முழுவதும் 40 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிரதான விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாரிசின் ஒர்லி விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் விமானங்களில் மூன்றில் 2 பங்கு விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. அதேசமயம், நீண்ட தூர விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலும், 29-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரையிலும் வேலைநிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி