செய்திகள் மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானை!…

மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானை!…

மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானை!… post thumbnail image
பாங்காக்:-தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை பயன்படுத்தி வந்தனர். ஓய்வே இல்லாமல் இந்த பணியை செய்துவந்த மி-பாய், களைத்துப் போய் சவாரி ஏற்றி செல்ல மறுத்த வேளைகளில் அடித்து சித்ரவதை செய்து தங்களது வாடிக்கையாளர்களை அவர்கள் மகிழ்வித்தனர்.

இதனால், வற்றலும், தொற்றலுமாக நைந்துப்போன மி-பாயை கண்ட வன விலங்கு ஆர்வலர்கள் யானைகளுக்கான புத்தாக்க முகாமில் அதை சேர்க்க ஏற்பாடு செய்தனர். முதலில் இந்த புத்தாக்க முகாமையும் ஒரு கொத்தடிமைக் கூடாரம் என்று கருதிய மி-பாய், யாரிடமும் பழகாமல் பிற யானை கூட்டத்திடம் இருந்து ஒதுங்கியே இருந்தது. பின்னர், அவ்வழியே தூரத்தில் வந்த ஒரு யானையை உற்றுப்பார்த்து அது தனது தாயான மாய் யூய் என்பதை உணர்ந்து கொண்டது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்த தாயும்-மகளும் சந்தித்து மகிழ்ந்த அந்த அற்புதத் தருணத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி