செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…

புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!…

புதிய கிரகத்திற்கு விஸ்வநாதன் ஆனந்தின் பெயர்!… post thumbnail image
புது டெல்லி:-புதிதாக கண்டுபிடிக்கப்படும் சிறிய கிரகங்களுக்கு, புகழ்பெற்ற நபர்களின் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே, டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன், கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிராட்மேன் ஆகியோரின் பெயர்கள் சிறிய கிரகங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 1988-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ஜப்பானை சேர்ந்த கென்சோ சுசுகி என்பவரால் சிறிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இதுவரை எண்களை வைத்து மட்டும் அழைக்கப்பட்டு வந்த அந்த கிரகத்திற்கு இப்போது ‘விஷ்யானந்த் 4538’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பெயரை தேர்ந்தெடுத்த ‘சிறிய கிரகங்கள் ஆய்வு மையத்தின்’ விஞ்ஞானி மைக்கேல் ருடேன்கோ இதுபற்றி கூறும் போது, பலரின் பெயர்களை கவனமாக பரிசீலித்தபின்பே விஸ்வநாதன் ஆனந்த் பெயரை தேர்ந்தெடுத்தேன். அவர் சிறந்த செஸ் வீரர் மட்டும் அல்ல, வானியல் மீது அதிக ஆர்வம் கொண்ட நல்ல மனிதரும் ஆவார் என்று தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி